பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
பெண்ணாடம்: பெண்ணாடம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்ணாடம் சோழநகர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி காலை 7:00 மணியளவில் அனுக்ஞை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ேஹாமம், மாலை 5:00 மணியளவில் வாஸ்து சாந்தி, இரவு 7:00 மணிக்கு யாகசாலை பிரவேசத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணியளவில் விமான கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல், மூன்றாம் கால பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் நான்காம் கால பூஜை, காலை 8:30 மணியளவில் ÷ காபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.