Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொதுத்தேர்வில் மாணவ-மாணவியர் அதிக ... திருப்பரங்குன்றத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு! திருப்பரங்குன்றத்தில் பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
05:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது.

Default Image
Next News

தை அமாவாசை, திருவோணம் நட்சத்திரம், சோமவாரம் ஆகியவை, ஒரு சேர அமையும் தினத்தில், மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் போல், 30 ஆண்டுகளுக்கு, ஒரு முறை மட்டுமே அமையும் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது.

நள்ளிரவு, 1 மணிக்கு, சுவாமிக்கு மஹா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர்  கோவிலில் இருந்து புறப்பட்ட உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், சூரிய உதயத்திற்கு முன், இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் எழுந்தருளினர். அதே நேரத்தில் சிவன் பட தெருவில் உள்ள அங்காளம்மன், ஒட்ட தெரு இரட்டை காளியம்மன், வட வீதி சுப்பிரமணிய சுவாமி, ஆதி காமாட்சியம்மன், பச்சையம்மன் ஆகிய சுவாமிகளும், ஒரு சேர குளக்கரையில் எழுந்தருளினர்.

சுவாமி தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் நீராட, வடக்கு பக்க குளக்கரை மற்றும் மேற்கு   பக்க குளக்கரையில், 10ஆயிரம் பக்தர்கள் குவிந்திருந்தனர். மேற்கு குளக்கரையில்  சிவாச்சாரியார்கள் கும்பம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, சுவாமி குளத்தில் இறங்கி நீராடும் தீர்த்தவாரி நடந்தது. அந்த நேரத்தில்  சிவாச்சாரியார்கள் குளத்தின் கரையை நோக்கி வெளியே வர தயாராயினர். அதே நேரம் பக்தர்கள் எதிர்பக்கமாக சென்றதால், குளத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அபூர்வ மகோதய தீர்த்தவாரியில், 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர் என, தெரிந்திருந்தும், பாதுகாப்புக்கு பெயரளக்கு, 4 போலீசார் மட்டுமே அங்கு இருந்தனர். வேறு எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar