மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க ஆலயத்தில் மஹா பிரதோஷ விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2016 11:02
சென்னை: சென்னை ஆவடி, கோவில் பதாகை, ஸ்ரீ மருதாம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க ஆலயத்தில் மகா சனி பிரதோஷம் நடைபெற்றது. தமிழ்ச் செல்வம் தலைமையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காஞ்சி மட ஆஸ்தான வித்வான் வாதவூரான் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். விழா ஏற்பாடுகளை ஜெய்சங்கர் சாமி மற்றும் ஆலய அறங்காவலர்கள் செய்திருந்தனர்.