பதிவு செய்த நாள்
18
பிப்
2016
11:02
அவிநாசி: பூண்டியில், மகா மகத்தன்று நீராட வரும் பக்தர்களுக்காக, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமுருகன்பூண்டியில், தி ருமுருகநாத சுவாமி கோவில், மாதவவினேஸ்வரர் கோவில் ஆகியன உள்ளன. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, நன்மையடைந்து செல்கின்றனர். பிள்ளையார் கோவில் அருகே <உள்ள மகாமக தெப்பக்குளம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. இக்குளம், மிகவும் பாழடைந்து, சாக்கடை கழிவு நீர் தேங்கும் பகுதியாக மாறி வந்தது. திருப்பூர் சைவ சித்தாந்த சபையின் முயற்சியில், சீரமைக்கப்பட்டு, கடந்தாண்டு தெப்போற்சவம் நடைபெற்றது. இம்முறை, மகாமகக்குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா, வரும், 22ல் நடைபெறுகிறது. குளத்தின் தரை, பாறைகள் நிறைந்து கரடுமுரடாக இருப்பதால், மண் மூட்டைகள் அடுக்கி சமன்படுத்தும் பணி மற்றும் குளத்துக்குள் தண்ணீர் இட்டு நிரப்பும் பணி நடைபெறுகிறது. 22ம் தேதி காலை, 6:30 மணிக்கு, கங்கை, காவிரி உள்ளிட்ட பல புண்ணிய நதி நீரை, குளத்தில் சேர்த்தவுடன், நீராடல் துவங்கும். சைவ சித்தாந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ‘பக்தர்கள் குளிக்க வசதியாக, மூங்கில் கம்பில் வரிசை அமைக்கப்பட்டு, கயிறு கட்டப்படும். வடக்குபுறம் வழியாக உள்ளே நுழைந்து, குளத்தில் நீராடி, தெற்குப்புற வாசல் வழியே வெளியேற வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்’ என்றனர்.