Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க ஆலயத்தில் ... பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு புதிய கொடிமரம்! பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்துக்கு தயார்
எழுத்தின் அளவு:
அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்துக்கு தயார்

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
11:02

உடுமலை: படைத்தல், காத்தல், அழித்தல் என, முத்தொழில் புரியும் திருமூர்த்திகளான அயன், அரன் மற்றும் அரி (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஆகி யோர் ஒரே சன்ன தியில் எழுந்தருளி அருள்பாலிக்கும், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், பிப்., 26ம் தேதி நடக்கும் கும்பாபி ேஷகத்துக்கு தயாராக உள்ளது.  உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், தளி பேரூராட்சிக்குட்பட்ட பகு தியில் அமைந்துள்ளது,  திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலாத்தலமாக திகழும் இப்பகுதிக்கு, உடுமலை சுற்றுப்பகுதி மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட மக்களும் வந்து  செல்கின்றனர். திருமூர்த்தி மலை என்றதும் நினைவுக்கு வருவது, இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலாகத்தான் இருக்கிறது. பிரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

உடுமலை தாலுகா, பழநி மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்களுக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கி  வருகிறது இக்கோவில்.  திருமூர்த்திமலையில் இருந்து சுமார், 40 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்கள் மற்றும் வழியோர கிராமங்களில் நடக்கும் ÷ காவில் திருவிழாக்களுக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்துதான் தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. பல நுாற்றாண்டுகளாக இந்த  நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மும்மூர்த்தி ஆண்டவன், திருமூர்த்தியாண்டவன், தெற்குசாமி, கஞ்சிமலையான், தென்கைலாசமூர்த்தி  என்றெல்லாம் பெயரிட்டு பலவாறாக, மக்கள் போற்றி வழிபட்டு வரும், அமணலிங்கேஸ்வரர் கோவிலில், கும்பாபிேஷகம் கடந்த, 2002ல்  நடத்தப்பட்டது.

கும்பாபிேஷகம் நடந்து, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் கும்பாபி ேஷகம் நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில்  புனரமைப்பு பணி கடந்த மாதம் துவங்கியது.  கோவில் சுற்றுச் சுவர்கள், முருகன், விநாயகர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்தும் மராமத்து பணி  செய்யப்பட்டு, பிப்., 26ம் தேதி கும்பாபிேஷகத்துக்கு, தயாராக உள்ளது. கும்பாபிேஷக விழா, பிப்., 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, விக்÷ னஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடும், மாமலை, 5:00 மணிக்கு, ேஹாமமும் நடக்கிறது. பிப்.,  23ம் தேதி காலை, 8:30 மணிக்கு, ேஹாமம், தீபாராதனையும், மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, தீபாராதனையும் நடக்கிறது. 24ம் தேதி காலை,  9:00 மணிக்கு, நவக்கிரஹ ேஹாமமும், மாலை, 5:00 மணிக்கு, முதற்கால யாக பூஜையும் நடக்கிறது. பிப்., 25ம் தேதி, காலை, 7:30 மணிக்கு,  இரண்டாம் கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கின்றன.

கும்பாபிேஷகம் நடக்கும் பிப்., 26ம் தேதி அதிகாலை, 4:30 முதல், 5:30 மணிக்குள், நான்காம் கால யாக பூஜையும், காலை, 6:00 முதல், 6:15  மணிக்குள், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, 900 மீ., உயரத்தில், பஞ்சலிங்க அருவிக்கு அருகில் அமைந்துள்ள, பஞ்சலிங்கேஸ்வரர்  மற்றும் விநாயகர், முருகனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.  காலை, 6:30 முதல், 7:30 மணிக்குள், அமணலிங்கேஸ்வரருக்கு கும்பாபிேஷகமும்  நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, தீபாராதனையும், 8:00 மணி முதல் மாலை வரை அன்னதானமும் வழங்கப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு,  மகா அபிேஷகத்தை தொடர்ந்து, சிறப்பு பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar