Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகப்பட்டினம் தாய்மூகாம்பிகை ... கடம்பத்துார் திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடம்பத்துார் திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இங்கிலாந்தில் மகாலட்சுமி கோயில் விரிவாக்க திட்டம்: திருப்பணியில் பங்கேற்க பக்தர்கள் அழைப்பு!
எழுத்தின் அளவு:
இங்கிலாந்தில் மகாலட்சுமி கோயில் விரிவாக்க திட்டம்: திருப்பணியில் பங்கேற்க பக்தர்கள் அழைப்பு!

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
06:02

இங்கிலாந்தில் கோயில் கட்டுவதற்கான முக்கிய குறிக்கோள் மகாலட்சுமிக்கென பிரமாண்டமான கோயில் கட்டுவது தான். இக்கோயில் கட்டவேண்டுமென 1978 முதல் திட்டம் இருந்தது. ஆண்டுதோறும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அத்துடன் அக்டோபர் 28 1978 முதல் மெல்ரோஸ் கொலம்பஸ் ஹால், மாஸாசூசெட்ஸில் லட்சுமி பூஜை மற்றும் தீபாவளி ஆகியவை சிறப்பாக கொண்டாப்படுகிறது. அதே சமயத்தில் நீதம் கிராமத்திலும் இது கொண்டாடப்படுகிறது. 1981ல் கீழே உள்ள முகவரியில் இந்த கோயிலை கட்ட இடம் வாங்கப்பட்டது.  அதன் பின் பல அடுக்காக ராஜகோபுரத்துடன் சேர்த்து இக்கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.பின்னாளில் கோட்ரூம், போர்டு ரூம் ஆகியவையும் சேர்க்கப்பட்டது. 1990 முதல் ஹிந்து கம்யூனிட்டி இங்கிலாந்தில் வளர ஆரம்பித்தது. அதன் பின் ஆகம விதிப்படி நேர்த்திக்கடனுக்கு காணிக்கைகள் செலுத்த ஆரம்பித்தார்கள்.

நித்திய பூஜை, வாரம் தோறும் சிறப்பு அபிஷேகம், முக்கிய திருவிழா கொண்டாட்டம் ஆகியவை இந்திய கோயில்களுக்கு இணையாக சிறப்பாக நடந்து வருகிறது. இங்கு இறைவழிபாடு மட்டுமின்றி, படிப்பு, கலாச்சார வளர்ச்சி, ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இளைய சமுதாயத்திற்கு கலாச்சார முக்கியத்துவம் பற்றி சொல்லிக்கொடுக்கப்படுகிறது. மதம், கலாச்சாரம், படிப்பு வளர, வளர கோயிலும் வளர்ந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், இந்த கோயிலை மேலும் விரிவு படுத்தவேண்டியுள்ளது. அதற்கு இடம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் வகுப்பறை, சமையலறை, விழா கொண்டாடும் ஹால் ஆகியவை கட்ட இருக்கிறார்கள். கோயில் விழாக்கள் கொண்டாடவும், இந்து மத பூஜை நடத்தவும் நெஹ்தி போர்டு இந்த விரிவாக்கம் பற்றி சில காலமாகவே திட்டமிட்டு வருகிறது.  இந்த விரிவாக்கத்தை இரண்டு பகுதியாக செய்ய இருக்கிறார்கள்.

முதல் பகுதி: மெயின் பில்டிங்கட்டி அதை தெற்கிலிருந்து மெயின் பில்டிங்கில் சேர்ப்பது. மகாமண்டபம், குளியலறையுடன் கூடிய ஓய்வறை, 330 பேர் அமரக்கூடிய மல்டி பர்பஸ் ஹால், கிரீன் ரூம், ஆடியோ வீடியோ ரூம் ஆகியவை கட்ட திட்டமிட்டு உள்ளார்கள். கீழ் தளத்தில் சமையலறை, பெரிய சாப்பாட்டு அறை , ஓய்வறை, கோட் ரூம் ஆகியவை கட்டுவதன் மூலம் தற்போதைய பூஜைக்கும் வகுப்பறைக்கும் உதவும்.

இரண்டாம் பகுதி: மகாமண்டபத்தில் இரண்டு பக்கமும் உள்ள பிரகாரத்தை விரிவு படுத்துவது.  பகுதி 1 கட்டுவதற்கு 5 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இக்கோயில் விரிவாக்கத்திற்கு அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படுகிறது.  அனைத்து மெம்பர்களும், பக்தர்களும், தாராளமாக நிதி கொடுத்து திருப்பணியில் பங்கெடுத்து மகாலட்சுமியில் அருள்பெற கேட்டு கொள்ளப்படுகிறது. இக்கோயில் நிதிக்கு வரி விலக்கு உண்டு.

தொடர்புக்கு:
New England Hindu Temple Inc.,
117 Waverly Street, Ashland, MA 01721
IRS Tax id: 04-2647330
Tel: 508-881-5775, Fax : 508-881-6401
www.srilakshmi.org

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar