சிவகாசி:சிவகாசியில் விநாயகர் சதுர்த்திக்காக 130 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் தயாரகி உள்ளது. இச் சிலைகள் காகித கூலால் 3 அடி முதல் 9 அடி உயர சிலைகள் தயாராகி உள்ளது. இவற்றில் மூன்று முக நாக விநாயகர் சிலை, ராஜவிநாயகர், கண்ணன், தட்சிணாமூர்த்தி கோல விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி மாவட்டபொருளாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் தயாராகி உள்ளன. 36 சிலைகள் சிவகாசியிலும், 94 சிலைகள் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இம் மாதம் 31ம்தேதி நகரின் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும். செப்.6ம்தேதி சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.