வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் சனிப்பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 01:02
வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ விழா நடந்தது. இக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு, சனிப்பிரதோஷத்தை யொட்டி பிப்.,21 முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.