பெருவயல் ரெணபலி முருகன் கோயில் மாசி மகம் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2016 02:02
ராமநாதபுரம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயில் மாசி மக உற்சவம் பிப்., 12ல் துவங்கியது.
இதையடுத்து அன்னம், மேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி தினமும் மாலை எழுந்தருளினார். பத்தாம் நாள் நிகழ்வாக நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்து. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதிகளில் வலம்வந்த தேர் நிலையை அடைந்தது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.