கும்மிடிப்பூண்டி: மாசி மகா மகத்தை முன்னிட்டு, சுண்ணாம்புகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், நேற்று தீர்த்தவாரி கடலாடு உற்சவம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புகுளம் கிராமத்தில் ஞானபிரஸூனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மகா மகத்தை முன்னிட்டு, நேற்று, தீர்த்தவாரி கடலாடு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10:00 மணி அளவில், சந்திரசேகர் அம்மன், அஸ்த்ரதேவர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் விசேஷ அலங்காரத்துடன் சமுத்ரகரைக்கு எழுந்தருளினர்.அஸ்த்ரதேவர் கடலாடு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்ற போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில், புனித நீராடினர். அதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.