மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பகோணம் மகாமகம் பிரசாதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பகோணம் மகாமகம் திருவிழா பிரசாதம் கிடைக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் தீர்த்தவாரி உற்சவ விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்க மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சார்பில் தலா மூன்று கிராம் எடையில் தலா 5 லட்சம் கஸ்துாரி குங்குமம் பிரசாதம் தயாரித்து வழங்கப்பட்டது. தென் மாவட்ட பக்தர்கள் வசதிக்காக மகாமகம் தீர்த்தவாரி பிரசாதம் மீனாட்சி அம்மன் கோயிலில் கிடைக்கிறது. பிரசாத பாக்கெட்டில் 100 மி., குங்குமம், விபூதி, முக்கிய இந்து கோயில்களின் பூஜை விபரங்கள், விழாக்கள் மற்றும் கட்டண விபரங்கள் அடங்கிய கையேடு இருக்கும். பாக்கெட் ஒன்றின் விலை ரூ.100. கோயில் டிக்கெட் கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். அஷ்டலட்சுமி கதவு: மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதி முன் பழைய இரும்பு கதவு இருந்தது. அதற்கு பதிலாக கோயில் ஆகம விதிப்படி ரூ.5 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்திலான ’அஷ்டலட்சுமி திருவுருவ மரக்கதவு’ பொருத்தப்பட்டுள்ளது. கதவில் மகாலட்சுமி, மகேஸ்வரி, கவுமாரி, ரேவதி, வைஷ்ணவி, சியாமளா, மனோன்மணி, ரூபினி ஆகிய அஷ்டலட்சுமியின் உருவங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. கதவின் மத்தியில் அம்மன், சிவன் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.