பதிவு செய்த நாள்
24
பிப்
2016
12:02
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த பிப்., 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடக்கின்றன. குண்டம் மிதிப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருக்கின்றனர். நேற்று மறு பூச்சாட்டுதல் நடந்தது. இன்று கொடியேற்றம், மார்ச் 1ல் தேர்க்கலசம் வைத்தல், சக்தி அழைப்பு, மறுநாள் குண்டம் பூமித்தல், பொங்கல் ஆராதனை, 3 மற்றும், 4 ஆகிய தேதிகளில் தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருக்கல்யாணம், வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலாவும் நடக்கிறது. மேலும், 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 6ம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியவை நடக்கின்றன. குமாரபாளையம் நகரில் உள்ள, அனைத்து மாரியம்மன் கோவில்களிலும், கம்பம் நடும் விழா நேற்று நடந்தது.