பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
சிவாஜி நகர்,: சிவாஜி நகர், ஷிருடி சாய்பாபா மந்திர் 50வது ஆண்டு விழா, இன்று துவங்குகிறது.சிவாஜி நகர், சிவாஜி ரோடு முதல் கிராசிலுள்ள ஷிருடி சாய்பாபா மந்திர், 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று காலை பாபாவுக்கு அபிஷேகத்துடன் விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து ஆரத்தி, ரத்ததான முகாம், மகா பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வச்சனா, கலச ஸ்தாபனம், ஹோமம், மங்கள வாத்தியம், இந்தி, தெலுங்கு மொழியில் சாய்பாபா பற்றிய குறும்படம் திரையிடப்படுகிறது.நாளை காலையில் ஆரத்தி, ஹோம பூஜை, மகா பூர்ணாஹூதி, சாய்பாபா பல்லக்கு, கலச அபிஷேகம், மகாமங்களார்த்தி நடக்கிறது. மாலை, நாதஸ்வர இசையுடன் சாய்பாபா தேர் வலம் வருகிறது. வரும், 27ம் தேதி மாலை, பாபாவுக்கு ஊஞ்சல் சேவை, பக்தி பாடல் பாடப்படுகிறது.