கொடுமுடி கோவில் கோசாலையில் பரிகார பூஜை: குளியலுக்கு அனுமதி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2016 11:02
கொடுமுடி: கொடுமுடியில் கோவில் வளாக கோசாலையில், பக்தர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து, அங்கேயே குளிக்கவும் அனுமதிப்பதாக புகார் கிளம்பியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் புகழ் பெற்ற மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரன், சூரியன், பிரம்மா மற்றும் ராகு, கேது சன்னதிகள் உள்ளன. இதனால் பிரபல பரிகார ஸ்தலமாக திகழ்கிறது. கோவில் வளாகத்தில் மாடுகளை பராமரிக்க கோசாலை உள்ளது. ஆனால் கோவில் குருக்கள் சிலர், மாடுகளை ஓரமாக கட்டிவிட்டு, மீதியுள்ள இடத்தில் பக்தர்களுக்கு பரிகார பூஜை செய்கின்றனர். பூஜை முடிந்து அங்கேயே அவர்களை குளிக்கவும் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கொடுமுடி ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகி கார்த்திகேயன் கூறியதாவது: பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர். கோசாலையில் சில குருக்கள் பரிகார பூஜை செய்கின்றனர். இதுவே தவறு. ஆனால் அவர்களை குளிக்கவும் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. கோவிலுக்குள் திருமணம் மட்டும்தான் செய்ய வேண்டும். இதுகுறித்து பலமுறை, செயல் அலுவலரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்த மாதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.