பதிவு செய்த நாள்
27
பிப்
2016
12:02
புதுச்சேரி: அரியாங்குப்பம் செங்கழுநீரம்மன் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை பிப்.,26 நடந்தது.
அரியாங்குப்பம் செடிலாடு செங்கழுநீரம்மன் கோவிலில், சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் நடராஜர், சிவகாமி, சண்டீகேஸ்வரர், மாணிக்கவாசகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு, பிப்.,26 காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர். தங்கதமிழ்வாணன், சிபி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலகுமார், சம்மதம், தன்ராஜ், ஆறுமுகம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கல்யாணசுந்தரம், கோமதி, பார்வதி ஆகியோர் நன்றி கூறினர்.