கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் 10, +2 மாணவர்களுக்காக சிறப்பு பூஜை நடந்தது. வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.