பதிவு செய்த நாள்
02
மார்
2016
11:03
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கல்வி பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார், 76வது பிறந்த நாள் விழாவையொட்டி, ஆதிபராசக்தி குழும கல்வி நிறுவனங்களின் சார்பில், காஞ்சிபுரம், வேலுார் மாவட்ட பள்ளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, மேல்மருவத்துாரில் நேற்று நடைபெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பங்காரு அடிகளார் பங்கேற்று, உதவிகள் வழங்கினார்.