உடுமலை: உடுமலை, வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற, ஹயக்ரீவர் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவியர் பங்கேற்றனர். பள்ளித்தலைவர் பாலசுந்தரம், செயலாளர் நந்த கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் பெற்றோரும் இப்பூஜையில் பங்கேற்றனர். பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற, பூஜையில் சிறப்பு யாகங்களும் நடந்தன.