பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
மணியனூர்: சேலம், உத்திரப்பன் நகர் மாகாளியம்மன் கோவில் மாசி திருவிழாவில், ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம், உத்திரப்பன் நகர் மாகாளியம்மன் கோவில் மாசித் திருவிழா பிப்.,12ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நேற்று காலையில் நடந்தது. தொடர்ந்து, பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கலும், மாலையில் அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை சத்தாபரணத்தில், காளியம்மன், அஷ்ட லட்சுமிகள் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது.