வைகுண்டரின் 184வது அவதார தினவிழா திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2016 10:03
தூத்துக்குடி: திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் அவதாரபதியில் நேற்று 184-வது அவதார தினவிழா நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 184-வது அவதார தினவிழா நேற்றுநடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதாரவிழா பணிவிடையும் நடந்தது. அப்போது திரளான மக்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்று கூறி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம், அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மமும் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மமும், மாலை 5 மணிக்கு பணிவிடை, தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அன்னதர்மம் நடந்தது. விழாவில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயத்துரை, வக்கீல் எஸ்.கே.சந்திரசேகரன், வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.தோப்பு மணி, ஆர்.சிங்கபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் பி.சுந்தரபாண்டி நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.