சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர்சுவாமி கோயிலில் மாசி பிரதோஷ விழா நடந்தது. மார்ச்,6 மாலை 4.00 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அமைந்த நந்தீஸ்வரருக்கு சிவாச்சாரியார் பல்வேறு அபிஷேக, தீபாராதனைகளை செய்தார்.
ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி பக்தர்கள் புடைசூழ ஆடி வீதியில் எழுந்தருளினர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. காளை வாகனத்தில் அம்மன் சுவாமி ஆடி வீதியில் எழுந்தருளினர்.