அரியலுார்: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு,நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது.யுனெஸ்கோவால், புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, முதன்முதலாக துவங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு,கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் தலைமை வகித்தார். விழாவில், முதல் நாள் நிகழ்ச்சியாக, ஆறு குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.