பதிவு செய்த நாள்
08
மார்
2016
12:03
கோவை: இருகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று குண்டம் இறங்கும் திருவிழா நடக்கிறது. இருகூரில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சிவராத்திரி விழாவையொட்டி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி இன்று காலை 8:30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, வெள்ளைக்காப்பு சாத்தப்பட்டு, நொய்யலுக்கு அம்மன் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும், அங்கு நீராடி சந்தனம் வாசனை திரவியங்களோடு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, கோவிலை அம்மன் அடைகிறார். காலை 8:30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பூசாரிகள், அருளாளர்கள், பக்தர்கள், 60 அடி நீளம் கொண்ட, குண்டத்தில் இறங்குகின்றனர். இதையடுத்து, காலை 11:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருகிறார். இன்றும், நாளையும் பரிவேட்டை நடக்கிறது. நாளை மறுதினம் தெப்பத்தேர், மார்ச் 11ல், திருவிளக்குபூஜை, மார்ச் 12 ல் வசந்தவிழா, மார்ச் 13ல் பேச்சியம்மன் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.