நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், 108 சிவலிங்கம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர் அடுத்த, நரசிங்கபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று, மஹா சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில், 108 சிவலிங்கம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.