சூரிய கிரகணம்: திருமலை கோயில் நடை 13 மணி நேரம் அடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2016 03:03
திருப்பதி: சூரிய கிரகணம் வருகின்ற 9ம் தேதி காலை 5:47க்கு ஆரம்பித்து 9:08க்கு முடிகிறது. இதை முன்னிட்டு முதல் நாள்(08/03/16) இரவு 8:30 மணியில் இருந்து மறுநாள் (09/03/2016) காலை 10 மணி வரை திருமலை திருப்பதி நடை கிட்டத்தட்ட 13 மணி நேரம் அடைக்கப்பட்டு இருக்கும். இந்த நேரத்தில் நடைபெறும் சகஸ்ரநாம பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த நேரத்தை மனதில் வைத்து தரிசனத்திற்கு வர நிர்வாகம் கேட்டுக்கொண்டுக்கொள்கிறது.