பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிரகதீஸ்வரருக்கு நேற்று முன்தினம் இரவு துவங்கி, விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாசி தேய்பிறை சதுர்த்தி திதியில், அம்பிகை சிவபெருமானை வணங்கியதால், இந்த நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை, சிவனை பூஜை செய்தால், அவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். என்பது ஐதீகம்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய, விடிய பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.மேலும், 13வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி விழா துவங்கி, வரும், 13ம் தேதி வரை நடக்கிறது. இதில், 600-க்கும் அதிகமான கலைஞர்கள் பங்கேற்று, கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி ஆகிய நடனங்களை ஆடுகின்றனர்.