பல்லடம் : பல்லடம் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மகா சிவராத்திரி மற்றும் குண்டம் வளர்க் கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அதிகாலை, கோவில் அருளாளர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.