சின்னாளபட்டி: சின்னாளபட்டி வடக்கு தெரு மகா பிரத்தியங்கரா தேவி கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகம் துவங்கியது. மிளகாய், மிளகு, வெற்றிலை, பட்டுத் துணிகள் உள்ளிட்டவை யாக குண்டத்தில் எரியும் அக்னியில் இடப்பட்டன. தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் கொண்டு வந்த மாதுளம் பழங்கள், மஞ்சள், குங்குமம் பூசப்பட்ட பூசணிக்காய்கள் அக்னி குண்டத்தில் ஆகுதி செய்யப்பட்டன. தீர்த்த கலசங்கள் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தபின் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அலங்காரத்திற்கு பிறகு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.