சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியில் துவங்கிப் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. குமார சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சம் பிரதமை முதல் மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. செவ்வாய்
கிழமை விரதம்: தை மாதம் அல்லது ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில் துவங்கி,
ஒரு வருடம் வரை செவ்வாய்க் கிழமை தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாதம் சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம்: ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கும் விரதம்.