திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2016 11:03
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 15ம் தேதி கொடியேற்றுடன் துவங்குகிறது. 24ம் தேதி வரை விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படி பூஜை முறைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாத்தினர் செய்து வருகின்றனர்.