புதுச்சேரி: குருமாம்பேட் ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. புதுச்சேரி குருமாம்பேட் ராகவேந்திரா நகரில் ராகவேந் திரர் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 10ம் தேதி முதல் ராகவேந்திரா பட்டாபிஷேக வைபவம் நடந்து வருகி றது. 15ம் தேதி வரை, நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. அதையொட்டி, 12.௦௦ மணி வரையில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.