ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2016 11:03
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ÷ காவில் மகா கும்பாபிஷேகம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சுரேஷ்குமார் தனது குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் சீனிவாசனிடம் கும்பாபிஷேக பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் யாகசாலை பணிகளை பார்வையிட்டார். அவரிடம் அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் உய ரதிகாரிகளிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பதாக கூறினார்.