சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் 23ம் தேதி பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2016 12:03
கடலுார்: புதுவண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா இன்று 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 23ம் தேதி பங்குனி உத்திர பெரு விழா நடைபெறுகிறது. அதற்கான விழா இன்று 14ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 6ம் நாளான 19ம் தேதி மாலை பாடலீஸ்வரர், பெரியநாயகி முன்னிலையில் சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி – தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9ம் நாளான 22ம் தேதி காலை 8:00 மணிக்கு ÷ தரோட்டமும், மறுநாள் 23ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அன்று காலை உத்திராபாத கோபுர தரிசனமும், தொடர்ந்து 108 சங்கு பூ ஜை, மகா அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு யாகசாலை, கலச பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடக்கிறது.