விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா ஏப்.3ம் தேதி நடப்பதையொட்டி நேற்று பங்குனி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் ஏப்.3ல் பொங்கல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பாக வீடு தோறும் தண்டோர போட்டுசொல்லும் பங்குனி சாட்டு உற்சவம் நேற்று இரவு 8 .15 மணிக்கு நடந்தது.