காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கேடக வாகனத்தில் வீதி உலா வந்தார். வருகிற 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வள்ளி நாயகி திருமணமும், 9 மணிக்கு பூ ப்பல்லக்கும், 21-ம் தேதி தெப்ப திருவிழாவும், 22-ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகல் 4 மணிக்கு ÷ தர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு வீதி உலாவும் நடக்கிறது. 23-ம் தேதி காலை 10 மணிக்கு உத்திரம் தீர்த்த விழா, இரவு 8 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பொன்னம்பல அடிகளார் செய்து வருகிறார்.