பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா துவங்கியது.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்றுமுன்தினம், விழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், தர்மராஜாவிற்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 23ம் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான்சிரசு, ஊர்வலம் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 9:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும்; 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு குண்டம் பூவில் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம், 26ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தம்; ஊஞ்சல், பட்டாபிேஷகம், 27ம் தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.