பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
திருப்பூர் :கொங்கணகிரி முருகன் கோவில் ராஜகோபுர பணிகளை துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ளது, பிரசித்தி பெற்ற கந்த பெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பல்வேறு காரணங்களால், இப்பணி ஒரு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது. எனினும், திட்டமிட்டபடி கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில், மாற்று வழியில், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்வதற்கான மாற்றுப்பாதையும், கல்லும், மண்ணுமாக உள்ளது. எனவே, ராஜகோபுர பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.