15 ஆண்டாக பழமையான கோயில்களில் உழவாரப்பணி செய்யும் காரைக்குடி குழு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 12:03
காரைக்குடி: காரைக்குடி வல்மீகி நாதர் பாகம்பிரியாள் உழவார பணிக்குழு 15 ஆண்டுகளாக பழமையான கோயில்களில் உழவார பணி மேற்கொண்டு வருகிறது. இக்குழுவில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 40 ஞாயிற்றுக்கிழமை உழவார பணி மேற்கொள்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 5 கோயில்கள் வரை சுத்தம் செய்கின்றனர். இதற்காக அந்தந்த பகுதிகளில் பணிக்குழு பொறுப்பாளர்களாக சிவனடியார்களை நியமித்துள்ளனர். இந்த குழு இதுரை 200 க்கும் மேற்பட்ட கோயில்களில் உழவார பணி செய்துள்ளது. உழவார குழுத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: பழமையான அம்பாள், சிவன் கோயில்களை கண்டறிந்து உழவார பணி செய்கிறோம். திருவெற்றியூர், திருவாடானை, திருதேர்தவளை, திருப்புனவாசல், காரைக்குடி, உப்பூர், வ.சூரக்குடி, ராமேஸ்வரம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பணி மேற்கொள்வோம். ஒரு சில கோயில்களில் நன்கொடையாளர் பங்களிப்புடன் சுவாமிக்கு தேவையான வஸ்திரங்கள், பொருட்கள் வாங்கி கொடுப்போம். நன்கொடையாளர்கள் கிடைக்காத இடங்களில் மடிப்பிச்சை ஏந்தியாவது சுவாமிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுக்கிறோம், என்றார்.