பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
கொண்டலாம்பட்டி: சேலம், கொண்டலாம்பட்டி அடுத்த ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன், சித்தி விநாயகர், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி திருவிழா இன்று துவங்குகிறது. காலை, 6 மணிக்கு மூன்று கோவில் காளைகள், வீதியுலா அழைத்து வரப்படுகிறது. மாலை, 6 மணிக்கு, கோவில் கருவறை முன், மூன்று காளைகளும் நிறுத்தப்பட்டு பூஜை, வழிபாடு நடக்கவுள்ளது. இதையடுத்து, கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து, நிர்வாக குழு தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், மூன்று காளைகளை அழைத்து செல்ல, கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அமைதியான முறையில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.