ஈரோடு: ஈரோட்டில் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா இன்று நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி காசிபாளையம், கல்யாணசுந்தரம் வீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா, கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரம் நடந்தது. கங்கணம் கட்டுதல், கும்பம் அலங்கரித்தல் நிகழ்ச்சி, தீர்த்த ஊர்வலம் நடந்தது. இந்நிலையில் பொங்கல் வைபவம், சிறப்பு பூஜை மகா தீபாராதனை இன்று வெகு விமர்சையாக நடக்கிறது. மறு பூஜையுடன் நாளை விழா நிறைவு பெறுகிறது.