பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், ஆவல்நாயக்கன்பட்டி வான்றாம்பட்டியில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை மறுநாள் (25ம் தேதி) நடக்கிறது. இன்று (மார்ச் 23) காலை, 9 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 9 மணிக்கு, புண்யாக வாசனம், கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை, பூர்ணாகுதி, அங்குரார்பணம் தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள், அதிகாலை, 4.30 மணிக்கு, கும்பங்களுக்கு சிறப்பு பூஜை, நாடிசந்தானம், காலை, 6 மணிக்கு, மாரியம்மன், கணபதி, நவகிரகம், பட்டாளம்மன், பாலமுருகன், நாகதேவதை, ஊர்காவல் மற்றும் எல்லை தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.