சேந்தமங்கலம்: வெள்ளாளப்பட்டியில், சக்தி மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி இன்று (23ம் தேதி) மாலை நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த, கல்குறிச்சி பஞ்சாயத்து, வெள்ளாளப்பட்டி கிழக்கு தெருவில், சக்தி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 15ம் தேதி, கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று பால்குடமும் எடுத்து வந்து பொங்கல் வைத்தனர். இன்று மாலை பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.