பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு விழாவையொட்டி, மூலவர் விநாயகருக்கு, 1008 சங்காபிஷேகம் நடந்தது.
மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு சஹஸ்ர சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை, முதல்கால யாக பூஜை, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ ஹோமங்கள் நடந்தது. அதையடுத்து, கலசம் புறப்பாடாகி, 10:00 மணியளவில், மூலவர் விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம் நடந்தது. உற்சவமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சோடசோபசார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதியுலா நடந்தது. பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் ஷண்முகம் தலைமையில் நாத, லய, சங்கீத சங்கமம் இசை நிகழ்ச்சி நடந்தது.