பதிவு செய்த நாள்
26
ஆக
2011
02:08
சீனாவின் யுனான் மாகாணத்தில், இஜா என்ற சிறிய நகரம் உள்ளது. இங்குள்ளவர்கள், ஆகஸ்ட் மாதத்தை, "பேய்கள் மாதம்ஆக கடைபிடிக்கின்றனர். இந்த மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில், பெண்களின் மார்புகளை தொடும் திருவிழா, இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கி.பி. 581-619களில், சீனாவை சுயி அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அப்போது, திருமணமாகாத ஏராளமான இளவயது ஆண்களை, இந்த அரச வம்சத்தினர், தங்கள் படைகளில், கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டனர். இவர்களில் பலர், திருமணம் ஆகாமலேயே, போர்களில் மடிந்து விட்டனர். இவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையாமல், ஆவிகள் உலகத்தில் வலம் வருவதாகவும், ஆண்டு தோறும் பேய் மாதத்தில், இந்த ஆவிகள் பூமிக்கு வந்து, திருமணம் ஆகாத இளம் பெண்கள், பத்து பேரின் உடலுக்குள் புகுந்து விடுவதாகவும், இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த ஆவிகளிடம் இருந்து, தங்களை காத்துக் கொள்ளும் வகையில், இந்த ஊரில் உள்ள, திருமணம் ஆகாத பெண்கள், தங்கள் மார்புகளை, ஆண்கள் தொடுவதற்கு, விருப்பம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிகழ்வதன் மூலம், கெட்ட ஆவிகள், தங்களை தொந்தரவு செய்யாது என்பது, பெண்களின் நம்பிக்கை. இதற்காகவே, மேலே கூறிய மூன்று நாட்களிலும், இந்த, "விசித்திர திருவிழா இஜா நகரில், விமரிசையாக நடைபெறுகிறது. இது மூட நம்பிக்கை என, தற்போது விமர்சனம் எழுந்தாலும், சீன மக்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த விழாவை, பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.