திருக்கனுார் :கே.ஆர்.பாளையம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் - கூனிச்சம்பட்டு செல்லும் சாலையில் உள்ள வழிகாட்டி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று நடந்தது.காலை 9:00 மணிக்கு முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் காவடி வீதியுலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.