பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
கரூர்: கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாள் திருவீதி உலா, பல்லக்கு, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமானத்தில் காட்சித்தருதல், குதிரை வாகனத்தில் அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இன்று காலை நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம், தரிசனம், தீர்த்தவாரியும், இரவு ரிஷபவாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. நாளை காலை விடையாற்றி உற்சவம், இரவு ஆளும் பல்லக்கு, 26ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 27 ம் தேதி அபி?ஷகம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.