கெச்சானிபட்டியில் பழனியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2016 01:03
வடமதுரை:தென்னம்பட்டி ஊராட்சி கெச்சானிபட்டியில் பழனியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம் அழைப்புடன் முதல் கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை துர்கா பூஜையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சீத்தாமர நால்ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன்அய்யங்கார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஒன்றிய தலைவர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சுப்பையா மற்றும் ற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.