பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
திருப்பூர் :திருப்பூர், கரட்டாங்காடு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று நடைபெற்றது. கடந்த, 15ம் தேதி, பூச்சாட்டு, பொரி மாற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி, தீர்த்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளம், வாண வேடிக்கையுடன், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் படைக்கலம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 8:30 மணிக்கு, பொங்கல் வைத்தல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
* புளியங்காடு கிருஷ்ணா நகர், ராமபுரம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு பொங்கல் விழா, 14ல் துவங்கியது. கம்பம் அழைத்தல், சக்தி கும்பம் அழைத்தல், படைக்கலம் அழைத்தல், அம்மை அழைத்தல் மற்றும் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.