Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்பிரமணிய சுவாமி ... முருகர் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.39 ஆயிரத்திற்கு ஏலம்! முருகர் வேலில் செருகப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை தர்மராஜா - திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் விழா!
எழுத்தின் அளவு:
ஆனைமலை தர்மராஜா - திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் விழா!

பதிவு செய்த நாள்

26 மார்
2016
11:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடந்தது. விரதமிருந்த  பக்தர்கள், குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூ ஜைகள் நடக்கின்றன.  கடந்த 13ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த 23ம் தேதி  இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம்,  அரவான்சிரசு, ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்,  63 அடி உயரம் உள்ள பெரிய தேரில், கண்ணபிரான், தர்மராஜா, திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலி த்தனர். மேலும், 27 அடி உயர தேரில், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின், வடம் பிடித்த இரண்டு தேரும், குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து நிலை நிறுத்தப்பட்டது.  இரவு, 9:30 மணி முதல் குண்டம் பூ வளர்த்தல்  நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து, நேற்று காலை, 8:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. அருளாளிகள், பக்தர்கள் குண்டத்தில் இறங்க தய õராக வந்தனர். காலை, 8:15 மணிக்கு முதலில், அம்மன் அருளாளி தண்டபாணி,  பூச்செண்டு உருட்டி குண்டத்தில் இறங்கினார். அவரை தொடர்ந்து,  விரதமிருந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் வரிசையாக இறங்கினர். மேலும், மூன்று பக்தர்கள், ஒன்பது அடி அலகு குத்திக்கொண்டும்  குண்டம் பூவில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். திரளான பக்தர்கள், பங்கேற்று, குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியையடுத்து, திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் தேர் ஊர்ந்து  சென்ற போது, பலரும் பழங்களை வீசி எறிந்து, தர்மராஜா மற்றும் திரவுபதியம்மனை வழிபட்டனர். மேலும், குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்,  பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.  விழாவில், செயல் அலுவலர் ஜெயசெல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.  பின், மாலையில், தேர் வடம் பி டிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. அம்மனின் தாய் வீடு என அழைக்கப்படும் வீட்டில் இரவு நிலை நிறுத்தப்படும். தொடர்ந்து,  இன்று திருத்தேர் நிலை நிறுத்தம்; ஊஞ்சல், பட்டாபிேஷகமும்; நாளை மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar