பெரியகுளம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2016 01:03
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாணம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் லட்சுமிநாராயணப் பெருமாள், லட்சுமிதேவிக்கு ஊஞ்சல் அலங்காரத்தில் திருமாங்கல்யம் கட்டினார். முன்னதாக யாகசால பூஜை நடந்தது. கோயிலில் பேரின்ப விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், துர்க்கை, ஆஞ்சநேயர், ராமானுஜர், கருடாழ்வர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.